தனி நபர் வருமான வரி விலக்கில் மாற்றம் இல்லை

0 2628

தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படாத நிலையில், வரும் நிதி ஆண்டில் ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படாததால், தற்போதைய அளவான இரண்டரை லட்சம் ரூபாயாக தொடர்கிறது. . திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் செலுத்தும் வரி 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுதகுதியுள்ள, ஸ்டார்ட் அப் எனப்படும் புதிய நிறுவனங்களுக்கான வருமான வரிச்சலுகை அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரும்பு கழிவுகளுக்கான சுங்க வரி விலக்கு மேலும் ஓராண்டுக்கும், இறால் வளர்ப்பு சார்ந்த தொழில்களுக்கு தேவைப்படும் சில பொருட்களுக்கு வரிச்சலுகையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பங்குகள் மூலமான வருமானத்திற்கு பெறப்படும் மூலதன ஆதாயத்திற்ன கூடுதல் வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. காப்பீடு தொகை போன்றவற்றை மொத்தமாக பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வரி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் என்பிஎஸ் திட்டத்தில் அளிக்கப்படும் பங்களிப்பு 10 சதவிகிதத்தில் இருந்து 14 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது.

மெத்தனால் உள்ளிட்ட சில குறிப்பிட்ட ரசாயனங்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. வைரம் மற்றும் நவரத்தின கற்களுக்கான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் விவசாயத் துறைக்கான கருவிகள் மீதான சுங்க வரி விலக்கு நீட்டிக்கப்படுகிறது.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மொபைல் ஃபோன் சார்ஜர்களின் டிரான்ஸ்பார்மர் பாகங்கள் மற்றும் மொபைல் கேமரா லென்ஸ் ஆகியவற்றுக்கு வரி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி வரி 7.5 சதவீதமாக குறைக்கப்படும்.

பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30 சதவீதம் வரி விதிக்கப்பட உள்ளது.குடைகளுக்கான சுங்க வரி 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எத்தனால் கலக்கப்படாத எரிபொருளுக்கு கூடுதல் கலால் வரியாக லிட்டருக்கு 2 ரூபாய் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக, பிளாக் செயின் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி வரும் நிதி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டின் ஜூன் மாதத்தில் சுங்கவரியில் மேலும் சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்படுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments