நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் - முழு விவரம்

0 12221

                                                                             

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்றத்தில் 2022-2023ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல்

மின்னணு முறையில் மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல்

2ஆவது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

image

Make In India திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட டேப்லட்டில் பட்ஜெட் தாக்கல்

கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ளது

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார சவால்களை இந்தியா திடமாக எதிர்கொண்டுள்ளது

கொரோனா பரவலால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரிசெய்து இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது

கொரோனா பரவலுக்கு முந்தைய பொருளாதார நிலைக்கு இந்தியா திரும்பியுள்ளது

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 9.2%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது

நடுத்தர வகுப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நிதித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன

உலகில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா மாறி வருகிறது

சிறு, குறு, நடுத்தர தொழிற்துறையினரை மேம்படுத்தும் வகையில் புதிய வரி விதிப்புகள் இருக்காது

ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது

அடுத்த 25 ஆண்டுகால வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது

வளர்ச்சிக்கான பட்ஜெட்

டுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை

புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பட்ஜெட்டாக நடப்பாண்டின் பட்ஜெட் இருக்கும்

ஒருங்கிணைந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

எல்ஐசி பங்குகள் விரைவில் வெளியீடு

ல்ஐசி நிறுவனத்தின் பொது பங்குகள் விரைவில் வெளியிடப்படும்

உற்பத்திக்கான ஊக்கத்தொகைத் திட்டம் நல்ல பலனை அளித்து வருகிறது

வரும் நிதியாண்டில், புதிதாக 25,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்க இலக்கு

போக்குவரத்து உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

image

400 புதிய ரயில்கள் அறிமுகம் செய்யப்படும்

யில் நிலையங்களையும், நகர்புற மெட்ரோக்களையும் இணைக்க பெரியளவில் திட்டம்

வந்தே பாரத் திட்டத்தின் அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய ரயில்கள் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும்

image

இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்

நாடு முழுவதும் ரசாயன உரங்களின் பங்களிப்பு இல்லா இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்

விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை

உள்நாட்டில் எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

நாட்டில் 1.63 கோடி விவசாயிகளிடம் இருந்து தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன

இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்க நடவடிக்கை

புதிய ஊரக தொழில் மற்றும் வேளாண் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

வேளாண் பொருட்களுக்கு ரூ.2.73 லட்சம் கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது

காவிரி-கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டம்

கிருஷ்ணா நதி - பெண்ணாறு - காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்

காவிரி-கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது

விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்யும் திறன் அதிகரிப்பு

ஆத்மநிர்பர் பாரத் என்ற தற்சார்பு இந்தியா திட்டம் பெரியளவில் வளர்ச்சியை கண்டுள்ளது

அவசர கால கடன் உதவி திட்டங்கள் மூலம் 1.30 கோடி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பலன் பெற்றுள்ளன

சிறு, குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க வழங்கப்படும் அவசர கால கடன் உதவி திட்டம் 2023 மார்ச் வரை நீட்டிப்பு

டிரோன் மூலம் நில அளவீடுக்கு அனுமதி

வேளாண் நிலங்களை அளவீடு செய்ய டிரோன்களை பயன்படுத்த அனுமதிக்கப்படும்

image

ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவசர கால கடன் வழங்க ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு

சிறு, குறு, தொழில் நிறுவனங்களின் கடன் உத்தரவாத திட்டத்திற்கு கூடுதலாக 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

கல்விக்காக 200 தொலைக்காட்சிகள்

நாட்டில் கல்வி சேவைக்கான தொலைக்காட்சி சேனல்கள் 200ஆக அதிகரிக்கப்படும்

image


100 புதிய சரக்கு முனையங்கள் அமைப்பு

காதி சக்தி திட்டத்தின் கீழ் 100 புதிய சரக்குப் போக்குவரத்து முனையங்கள் ஏற்படுத்தப்படும்


மேக் இன் இந்தியா மூலம் வேலைகள்

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 60 லட்சம்வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன

அங்கன்வாடிகள் மேம்பாடு

நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்

வீடுகள் கட்ட ரூ.48,000 கோடி ஒதுக்கீடு

நாடு முழுவதும் 2023ஆம் ஆண்டுக்குள் 18 லட்சம் வீடுகள், குறைந்த விலையில் கட்டப்படும்

பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

நாட்டின் குடிமக்களின் தரத்தை மேலும் உயர்த்திட மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது

எல்லையோர கிராமங்கள், திறன்மிக்க கிராமங்களாக நவீன நுட்பத்துடன் தரம் உயர்த்தப்படும்

பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது

தபால் & வங்கிகள் இணைந்து செயல்பட புதிய திட்டம்

தபால் அலுவலக கணக்கிலிருந்து வங்கி கணக்குக்கு ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதி

தபால் துறையை, வங்கிகள் துறையோடு இணைந்து செய்ல

image

 ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு

ணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

75 மாவட்டங்களில் இ-பேங்கிங் அறிமுகம்

நாட்டில் 75 மாவட்டங்களில் பரிட்சார்த்த முயற்சியாக இ-பேங்கிங் அறிமுகம் செய்யப்படும்

ஏர் இந்தியா விற்பனை - விளக்கம்

ர் இந்தியா பங்குகள் விற்பனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது

இ-பாஸ்போர்ட் திட்டம் விரைவில் அறிமுகம்

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் திட்டம், வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும்

இ-பாஸ்போர்ட் திட்டம் விரைவில் அறிமுகம்

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் திட்டம், வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும்

image

பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை

கர்புறங்களில் பொதுப்போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

தூய்மையான குடிநீர் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி

வ்வொரு வீட்டிற்கும் தூய்மையான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம்

நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்

One Nation, One Registration திட்டத்திற்காக, மாநில பதிவு தரவுகள் ஒரே குடையின் கீழ் இணைக்கப்படும்

நில ஆவணங்களை மின்னணு முறையில் ஆவணப்படுத்த நடவடிக்கை

image


நீர்பாசனத் திட்டத்திற்கு ரூ.44,000 கோடி

நீர்பாசனத் திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் 44 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

மத்திய அமைச்சகங்களில் இ-பில் திட்டம்

த்திய அமைச்சகங்களில் காகிதமில்லா இ.பில் திட்டம் செயல்படுத்தப்படும்

மத்திய அமைச்சகங்களில் காகித பயன்பாட்டை முற்றாக குறைக்க நடவடிக்கை

image

சுற்றுலா துறைக்கு ரூ.5 லட்சம் கோடி

நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்த 5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

சூழல் பாதுகாப்புடன் 5ஜி திட்டம்

டப்பாண்டிலேயே 5ஜி தொலைத்தொடர்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை

சூழல் பாதுகாப்புடன் 5ஜி தொலைத்தொடர்பு திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதி

நடப்பாண்டிற்குள் 5ஜி அலைக்கற்றை ஏலம் விட நடவடிக்கை

image


2000 கி.மீ புதிய ரயில் தடங்கள்

2023ஆம் ஆண்டிற்குள் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்

பாதுகாப்புத்துறை ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதி

நாட்டின் ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத்துறைகளின் ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

ராணுவத்திற்கான பட்ஜெட் மதிப்பில் 25% நிதி பாதுகாப்புத்துறை ஆராய்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும்

சோலார் திட்டங்களுக்கு ரூ.19,500 கோடி

நாட்டில் சோலார் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

நாட்டின் மூலதன செலவினம் அதிகரிப்பு

நாட்டின் மூலதன செலவினம் கடந்தாண்டை விட 35.40%ஆக அதிகரித்துள்ளது

நாட்டில் நுகர்வை அதிகரிக்க, அரசின் மூலதன செலவினத்திற்கு ரூ.7.50 லட்சம் கோடி ஒதுக்கீடு

2025ல் அனைத்து கிராமங்களிலும் இண்டர்நெட்

பாரத் நெட் திட்டத்தின் கீழ் 2025ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களிலும் இண்டர்நெட் சேவை

image

"சர்வதேச தீர்வு மையம்"

தொழில்கள் தொடர்பான பிரச்சினைகளை, விவகாரங்களை தீர்த்து வைக்க சர்வதேச தீர்வு மையம் ஏற்படுத்தப்படும்

இந்திய மதிப்பில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்

ரும் நிதியாண்டில் ஆர்பிஐ மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும்

இந்திய பண மதிப்பான ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும்

image

மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி

மாநில அரசுகளின் முதலீட்டுத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

மாநில அரசுகளுக்கான கூடுதல் நிதி அளவு ரூ.15,000 கோடியாக அதிகரிக்கப்படும்

கிராமங்களிலும் எலக்ட்ரிக் சார்ஜ் மையங்கள்

கிராமங்களிலும் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க மின்சார சார்ஜ் மையங்கள் அமைக்கப்படும்

image

மாநிலங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி கடன்

மாநிலங்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி மூலதன கடனாக வழங்கப்படும்

வரும் நிதியாண்டின் கணக்குப் பற்றாக்குறை 6.4%ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது

2025-2026ஆம் நிதியாண்டிற்குள் கணக்கு பற்றாக்குறையை குறைக்க நடவடிக்கை

வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயருமா.?

நாட்டில் வரி செலுத்தும் ஒவ்வொருவருக்கும் நன்றி - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வரி செலுத்துவது எத்தகைய கடமை என்பதை மகாபாரத குறிப்பை சுட்டிகாட்டிப் பேச்சு

கூட்டுறவு சங்கங்கள் செலுத்தும் வரி 18%லிருந்து 15%ஆக குறைக்கப்படும்

கூட்டுறவு சங்கங்கள் செலுத்தும் கூடுதல் வரியில் 5% குறைக்கப்படும்

image

ஐடி ரிட்டர்ன்களுக்கு கூடுதல் அவகாசம்

திருத்தப்பட்ட வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய கால அவகாசம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை அடுத்தாண்டு மார்ச் வரையில் நீட்டிப்பு

டிஜிட்டல் மூலமான வருவாய்க்கு 30% வரி

பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும்

விர்ச்சுவல் மூலதன சொத்துகள் மீதான வரியில் 1% TDS வழங்கப்படும்

பங்குகள் மூலமான வருமானத்திற்கு பெறப்படும் மூலதன ஆதாய வரியில் கூடுதல் வரி 15%ஆக இருக்கும்

ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரிப்பு

2022 ஜனவரி மாதத்தில், ஜிஎஸ்டி மூலம் ரூ.1.40 லட்சம் கோடி வரி வருவாய் கிடைத்துள்ளது

பெருந்தொற்று காலத்திலும் ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வரி வருவாய் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது

இதுவரை இல்லாத வகையில் கடந்த ஜனவரியில் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரித்துள்ளது

image

 

பெருநிறுவனங்களுக்கான வரி குறைப்பு

பெருநிறுவங்களுக்கான வரி 12%லிருந்து 7%ஆக குறைக்கப்பட்டுள்ளது

டிஜிட்டல் மூலமான வருவாய்க்கு 30% வரி

பிட்காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் ஈட்டப்படும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும்

விர்ச்சுவல் மூலதன சொத்துகள் மீதான வரியில் 1% TDS வழங்கப்படும்

பங்குகள் மூலமான வருமானத்திற்கு பெறப்படும் மூலதன ஆதாய வரியில் கூடுதல் வரி 15%ஆக இருக்கும்

சுங்கவரியில் சீர்திருத்தங்கள்

டப்பாண்டின் ஜூன் மாதத்தில் சுங்கவரியில் மேலும் சீர்திருத்தங்கள் அறிமுகம் செய்யப்படும்

ஆபரண கற்களுக்கு வரி குறைப்பு

வைரம் உள்ளிட்ட ஆபரண கற்களுக்கான வரி 5% குறைக்கப்பட்டுள்ளது

image


வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை


தனிநபர் வருமான வரி விதிப்பு குறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை

இதன் மூலம் நடப்பு வருமான வரி விதிப்பு மாற்றமின்றி தொடர்வதாகவே கருத்து

image

 

மகளிருக்காக 3 புதிய வளர்ச்சித் திட்டங்கள்

ட்டச்சத்து 2.0 திட்டம் உட்பட 3 புதிய மகளிர் வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்

image

 

வருமான வரி உச்சவரம்பு

னிநபர் வருமான வரி உச்ச வரம்பு ரூ. லிருந்து ரூ. ஆக உயர்வு

தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை

தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாகவே தொடர்கிறது

டிஜிட்டல் கரன்சி வருகிறது

ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி முறை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

பிளாக் செயின் முறையின் படி டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்

வரும் நிதியாண்டில் நாட்டின் சொந்த டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்

மாநிலங்களுக்கு வட்டி இல்லா கடன்

னைத்து மாநிலங்களுக்கும் ஒரு லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லாத கடனாக அளிக்கப்படும்

வட்டி இல்லா கடன் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிதி உதவி

நீர் மின் உற்பத்தி மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு 1400 கோடி ரூபாய் ஒதுக்கீடு

டிரோன் தயாரிப்பில் தொடக்க நிலை தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஊக்கம் அளிக்கும்

நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

தொடக்க நிலை தொழில் நிறுவனங்களுக்கான வரி சலுகை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு

வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கிராமம், மற்றும் நகர்ப்புறங்களில் வரும் நிதியாண்டில் 80 லட்சம் வீடுகள் கட்ட 48,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு

வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

image


அரசு ஊழியர்களுக்கு சலுகை


த்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான வரி சலுகை உச்சவரம்பு 10 சதவிகிதத்தில் இருந்து 14 சதவிகிதமாக உயர்வு.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களும் சமூக பாதுகாப்பு பலன்களை பெற நடவடிக்கை

வரிச் சலுகை

ரும்பு கழிவுகளுக்கான சுங்க வரி விலக்கு மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

இறால் வளர்ப்பு சார்ந்த தொழில்களுக்கு தேவைப்படும் சில பொருட்களுக்கு வரிச்சலுகை நீட்டிப்பு

இறால் ஏற்றுமதியை ஊக்குவிக்க வரிகுறைப்பு அமலுக்கு வருகிறது

நாடாளுமன்றத்தில் தாக்கலாகும் பட்ஜெட்

 

image

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments