எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகையைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2 படகுகளுடன் சிறைபிடிப்பு
இலங்கை கடல்பகுதியில் எல்லை மீறி பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 21பேரை 2 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
நாகையில் இருந்து சென்று மீன்பிடித்தவர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த இலங்கை கடற்படையினர் மாதகல் கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்தனர். இரண்டு விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்த 21 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் அனைவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments