"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தேர்தல் பேரணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 15ஆம்தேதி வரை நீட்டிப்பு
சட்டப் பேரவை தேர்தல் நடைபெறும் பஞ்சாப், உத்தரபிரதேசம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் பேரணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை வரும் 15ஆம் தேதி வரை நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
5 மாநில தேர்தல் அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறையினருடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்தல் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ள ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், உள்ளரங்கு கூட்டங்களில் 500 பேர் வரை கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments