மத்திய அரசு பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணிபுரியும் உத்தரவு வரும் 15ஆம் தேதி வரை நீட்டிப்பு
மத்திய அரசு பணியாளர்களுக்கான வோர்க் ஃபரம் ஹோம் முறையை வரும் 15ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் செயலர்களுக்கு கீழ் உள்ள பணியாளர்கள் 50 சதவீதம் பேரை வீடுகளில் இருந்து பணிபுரிய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் வரும் 15ஆம் தேதி வரை உத்தரவு நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் நேரடி அலுவல் பணிகளுக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பயோமேட்ரிக் வருகை பதிவேடு நடைமுறை வரும் 15ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments