கோலமாவு கோகிலா.... மாட்டிக்கிட்டா மாளவிகா... காதலனுக்காக போதை பவுடர் கடத்தல்

0 9406
கோலமாவு கோகிலா.... மாட்டிக்கிட்டா மாளவிகா... காதலனுக்காக போதை பவுடர் கடத்தல்

ம்னி பேருந்தில் போதைப் பொருள் கடத்திய தனியார் நிறுவன மனிதவள பெண் அதிகாரியை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சினிமா பாணியில் விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர். காதலனுக்காக போதைப் பவுடர் வாங்கி வசமாக சிக்கிக் கொண்ட மாளவிகா குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

கோலமாவு கோகிலா படத்தில் நாயகி நயன்தாரா பேருந்தில் சென்று போதை பவுடர் கடத்தி சிக்கிக் கொள்வார், அதே போன்றதொரு நிஜசம்பவம் விசாகப்பட்டினத்தில் அரங்கேறி உள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இரு தினங்களுக்கு முன்பு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மும்பை டோனியைக் கைது செய்தனர்.

அவன் கொடுத்த தகவலின்படி திங்கட்கிழமை அதிகாலை ஹைதராபாத்திலிருந்து விசாகப்பட்டினம் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் பெண் ஒருவர் விலை மதிப்புள்ள போதை வஸ்த்துக்களை கடத்தி வரும் தகவல் கிடைத்தது.

விசாகபட்டினத்தில் குறிப்பிட்ட ஆம்னி பேருந்தை எதிர்பார்த்து போலீசார் காத்திருந்த நிலையில் பேருந்தில், வந்த பெண்ணோ பேருந்தை விட்டு இறங்கியதும் அருகில் நின்ற சொகுசுக் காரில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.

இதனை அடுத்து விசாகப்பட்டினம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து சினிமா பாணியில் அந்தப்பெண் சென்ற சொகுசுக் காரை விரட்டிச்சென்று மடக்கிப் பிடித்தனர்.

காரில் மாளவிகா என்ற பெண்ணும் ஹேமந்த் என்ற இளைஞனும் இருந்தனர். தங்களை காதலர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட மாளவிகா, தான் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எச்.ஆர் மேனேஜராக வேலை பார்த்து வருவதாக தெரிவித்தார்.

மாளவிகா கொண்டுவந்த கைப்பையை சோதனை நடத்திய போது அதில் 18 மேக்ஸ் போதை மாத்திரைகள் மற்றும் 2 கிராம் போதைப் பவுடர் ஆகியவை மறைத்து வைத்திருப்பதைக் கண்டுபிடித்த போலீசார், அதனைக் கைப்பற்றினர்.

விசாரித்த போது தனது காதலன் ஹேமந்த் கேட்டுக் கொண்டதன் பேரில் ஐதராபாத்தில் இருந்து போதைப் பொருளை வாங்கி வந்ததாகவும், விமானப் பயணம் ரிஸ்க் என்பதால் ஆம்னி பேருந்தில் வந்ததாக மாளவிகா போலீசாரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் கார் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

இந்த போதை மாத்திரைகள் மற்றும் போதைப் பவுடர் யாரிடமிருந்து பெறப்பட்டன? இவற்றை யார் யாருக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர்? என்று போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

டோனி அவனது செல்போனில் யார் யாரிடம் எல்லாம் போதை மருந்து தொடர்பாக பேசி உள்ளான்? என்பதை வைத்து போலீசார் ஒரு பட்டியல் போட்டு தங்கள் கைது வேட்டையை தொடங்கி உள்ளனர்.

இதில் இன்னும் சிலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதே நேரத்தில் காதலுக்காக இதயத்தை கேட்ட காலம் போய் போதைப் பவுடர் கேட்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் சில விபரீத காதல் ஜோடிகள் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments