2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்!

0 3200

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே, நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், 2022-23ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

மூலதன செலவினங்களை அதிகரிப்பதன் வாயிலாக வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் பட்ஜெட்டாக இது இருக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வரி விகிதங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது. சொத்து விற்பனையிலிருந்து வரும் வருவாய் வாயிலாகவும், 13 லட்சம் கோடி ரூபாய் கடன் பெறுவதன் வாயிலாகவும் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து வரவிருக்கும் நிதியாண்டில் மூலதன செலவினங்கள் அதிகரிக்கும் என்பதால் நிதி பற்றாக்குறையை 6 சதவீதமாக வைத்திருக்க முயற்சி மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.

நடப்பு நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீத வீழ்ச்சி இருந்த நிலையில் அடுத்த நிதியாண்டில் இதை 6.1 சதவீதமாக குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கொரோனா பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியில் இருந்து மீள வேண்டிய நிலை உள்ளதால், உள்கட்டமைப்பு திட்டங்கள், பொது சுகாதாரம், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments