புளோரிடா மாகாணத்தில் வீட்டின் முற்றத்தில் உறைந்து கிடந்த பச்சை உடும்புகள்..
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் குடியிருப்பு வாசி ஒருவர் தனது வீட்டின் முற்றத்தில் பனியில் உறைந்து நகரமுடியாமல் கிடந்த பச்சை உடும்புகளைக் கண்டார்.
Stacy Lopiano என்ற அந்தப் பெண் உடனடியாக தனது கணவருடன் இணைந்து அவற்றை சூரிய வெப்பம் படும் படி வைத்து நகர்ந்து செல்ல வைத்தார்.
சூரிய வெளிச்சத்தில் வைத்ததும் அவற்றின் உண்மையான நிறம் உடனடியாக வெளிப்பட தொடங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, தெற்கு ஃபுளோரிடாவில் வெப்பநிலை மிக மிக குறைந்திருப்பதால் உடும்புகள் உறைந்து மரத்திலிருந்து கீழே விழக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று காலையில் அங்கு வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக இருந்த சூழலில் Stacy Lopiano வீட்டு முற்றத்தில் உள்ள மரங்களில் இருந்து உறைந்த நிலையில் பச்சை உடும்புகள் கீழே விழுந்து கிடந்தன.
Comments