ஸ்கேன் சென்டரில் திடீர் தீ விபத்து... அலறியடித்து ஓடிய மக்கள்..

0 3510
மதுரையில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஒடி வந்தனர்.

மதுரையில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஒடி வந்தனர்.

ராஜா முத்தையா மன்றம் பகுதியில் உள்ள ஸ்கேன் செண்டரில் ஏசி பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்ற போது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ வேகமாகப் பரவியதால் ஊழியர்கள், ஸ்கேன் எடுக்க வந்தவர்கள் என 50 க்கும் மேற்பட்டோர் கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்தனர்.

ஸ்கேன் சென்டரில் இருந்த தீயணைப்பான்கள் மூலம் ஊழியர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சித்தனர். 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments