சாலையோரம் நடந்து சென்ற போது திறந்திருந்த பாதாள சாக்கடை குழிக்குள் விழுந்த நபர்..

0 2943
திருப்பூரில் அதிகாலை நேரத்தில் சாலையோரம் நடந்து சென்றவர் திறந்திருந்த பாதாள சாக்கடை பள்ளத்துக்குள் விழுந்து உயிரிழந்தார்.

திருப்பூரில் அதிகாலை நேரத்தில் சாலையோரம் நடந்து சென்றவர் திறந்திருந்த பாதாள சாக்கடை பள்ளத்துக்குள் விழுந்து உயிரிழந்தார்.

திருப்பூர் 18-வது வார்டு வி கே ஆர் நகர் பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாதாள சாக்கடைக் குழிகள் சில திறக்கப்பட்டு மூடாமல் விடப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

திருப்பூரில் தங்கி பெயிண்ட்டராகப் பணியாற்றி வந்த சேலத்தைச் சேர்ந்த பூபதி என்பவர் அதிகாலையில் அவ்வழியாக நடந்து சென்றபோது, திறந்திருந்த பாதாள சாக்கடை குழி ஒன்றுக்குள் விழுந்திருக்கிறார்.

நீண்ட நேரமாக யாரும் கவனிக்காததால், பூபதி உயிரிழந்திருக்கிறார். போலீசார் அவரது உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments