பத்தினி என்பதை நிரூபிக்க பெற்ற மகள் உயிரோடு தீவைத்து எரித்துக் கொலை..! 3 திருமணம் செய்த பெண் விபரீதம்

0 6145
சென்னை திருவொற்றியூரில் 10 வயது மகளை தீயிட்டு எரித்துக் கொலை செய்த வழக்கில் பெற்ற தாய் மற்றும் தாயின் மூன்றாவது கணவனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவொற்றியூரில்  10 வயது மகளை தீயிட்டு எரித்துக் கொலை செய்த வழக்கில்  பெற்ற தாய்  மற்றும் தாயின் மூன்றாவது கணவனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவொற்றியூர் பத்மநாபா காலனி 1வது தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி . இவருக்கும் பால்வண்ணன் என்பவருக்கும் முதல் திருமணம் நடைபெற்றது. மனைவியின் நடத்தை சரி இல்லாததால் பால்வண்ணன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஜெயலட்சுமியும் தன் பங்குக்கு வேறு ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் பிறந்த நிலையில் ஜெயலெட்சுமி தனது 2 வது கணவரை கழட்டி விட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு பத்மநாபன் என்ற ஐ.ஓ.சி லாரி ஓட்டுனரை 3 வதாக திருமணம் செய்து கொண்டார்.

பத்மநாபனுடன் குடித்தனம் நடத்தி இரண்டு குழந்தைகளை ஜெயலட்சுமி பெற்றுள்ளார். அனைவரும் ஒரே வீட்டில்தான் வசித்து வந்துள்ளனர் .

இந்த நிலையில் மனைவி ஜெயலட்சுமி 4 வதாக ஒருவருடன் பேச்சுவார்த்தையாக இருப்பதாக பத்மநாபன் மனைவியின் மீது சந்தேகம் கொண்டு சண்டையிட்டுள்ளார்.

தனது குழந்தையை காப்பாற்றவே தான் மூன்றாவதாக திருமணம் செய்ததாக பத்மநாபனிடம் கூறியிருக்கிறார் ஆனால் பத்மநாபன் இதை நம்பாமல் சந்தேகத்துடன் இருந்துள்ளார்

இதனையடுத்து நேற்று இரவு வேலை முடித்து குடிபோதையில் வீட்டுக்கு வந்த பத்மநாபன், மனைவி ஜெயலட்சுமியிடன், உன் உடம்பில் வித்தியாசமான செண்ட் வாசனை வருகிறது இது நீ எங்கு சென்று வருகிறாய் என சந்தேகப்படும்படி கேள்வி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

நள்ளிரவு பன்னிரண்டரை மணி அளவில் ஜெயலட்சுமியிடம் நீ கற்புக்கரசியாக இருந்தாள் உன் 2 வது கணவனுக்கு பிறந்த மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்து... நீ பத்தினி என்றால் அவளது உடம்பில் தீ பிடிக்காது எனக்கூறி அந்த சிறுமியை கொலை செய்ய நயவஞ்சக திட்டம் தீட்டி உள்ளான் பத்ம நாபன், ஜெயலட்சுமியும் தனது கடந்த கால வாழ்க்கையை மறந்து தான் பத்தினி என்பதை நிரூபிக்க போவதாக அவசரப்பட்டு, வீட்டில் இருந்த ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யை மகள் மீது ஊற்றி தீவைத்துள்ளார்.

அந்த சிறுமியின் உடலில் தீ பற்றிக்கொள்ள , அவள் கதறி அழுதபடி ஓடி உள்ளார். இதையடுத்து மகளை காப்பாற்ற போர்வை போட்டு அணைக்க முயற்சி செய்துள்ளனர். அதற்குள்ளாக உடல் முழுவதும் தீயில் எரிந்து கருகியது.

அந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீக்காயம் அதிகமாக இருந்ததால் உடனடியாக சிறுமியை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் 78% தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னதாக மாஜிஸ்திரேட் கிருஷணன் அந்த சிறுமியிடம் மரண வாக்குமூலம் பெற்றார் . அதன் அடிப்படையில் திருவொற்றியூர் ஆய்வாளர் சுதாகர் வழக்குப்பதிவு செய்து பத்தினி சண்டையில் ஈடடுபட்ட பத்மநாபனையும், ஜெயலக்ஷ்மியையும் கொலை வழக்கில் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments