தஞ்சாவூர் தனியார் பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

0 3355
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, சிபிஐ விசாரணை உண்மையை வெளிக் கொண்டுவரும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளது.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, சிபிஐ விசாரணை உண்மையை வெளிக் கொண்டுவரும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளது.

மதம் மாற வற்புறுத்தியதே தற்கொலைக்குக் காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மாணவியின் தந்தை உயர்நீதிமன்றத்தை அணுகினார். அந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் சார்பிலும் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்.

வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வார்டன் சகாயமேரியின் ஜாமீன் மனுவை கீழமை நீதிமன்றம் ஆவணங்கள் அடிப்படையில் பரிசீலனை செய்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் என தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments