ஓசூரில் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.25 லட்சம் பறிமுதல்

0 3203

ஓசூர் மாநகராட்சியில் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 25 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஓசூர் மாநகராட்சி முழுவதும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கும் பணியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தர்கா பகுதியில் வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது உரிய ஆவணம் இன்றி ரோஹித் மற்றும் மித்லேஷ் ஆகிய இருவரும் 25 லட்சம் பணம் வைத்திருந்ததால் அவற்றை கைப்பற்றி வருமான வரித்துறை அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments