மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகளால் இந்திய பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றம்
இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் எண்ணூறு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது.
நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்களுக்குப் பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களும் வரிச் சலுகைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று தொடக்கம் முதலே இந்திய பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றமடைந்தது.
முற்பகல் பத்தரை மணியளவில் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 856 புள்ளிகள் உயர்ந்து 58 ஆயிரத்து 56 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 251 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 353 ஆக இருந்தது.
இதனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குமதிப்பு 5 விழுக்காடு வரை உயர்ந்தது
Comments