அமெரிக்காவில் வரலாறு காணாத அளவில் வீசி வரும் பனிப் புயலால் அவசரநிலை பிரகடனம் - 1,400 விமானங்கள் ரத்து.!
அமெரிக்காவில் வரலாறு காணாத அளவில் வீசி வரும் பனிப் புயலால் நியூயார்க், நியுஜெர்சி, பாஸ்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
ஏறத்தாழ ஆயிரத்து 400 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனிக்குள் சிக்கிக் கொண்ட வாகனங்களை மீட்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டனர். தரையில் இருந்து 2 அடி உயரத்திற்கு பனி கொட்டிக் கிடப்பதால் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப் பொழிவால் மின்சார விநியோகம் தடைபட்டுள்ளது. ஏறத்தாழ 7 கோடி பேர் மின்சாரமின்றி பாதிக்கப்ட்டுள்ளனர். வீடுகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments