திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் தங்கைக்கு உள்ளங்கையால் வரவேற்பு அளித்த சகோதரர்கள்.!

0 7813

திருமண நிகழ்ச்சி ஒன்றில் சகோதரர்கள் தங்கள் கைகளை பாதையாக அமைத்து சகோதரிக்கு வரவேற்பு அளிக்கும் பாசமிகு வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மணப்பெண் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வரும் போது அங்கு காத்திருந்த அவளது சகோதரர்கள், பல வண்ணப்பூக்களால் மலர்ப் பாதை அமைத்திருந்தனர்.

அதுவும் போதாது என்று தங்கள் உள்ளங்கைகளை மணப்பெண் வரும் பாதை முழுவதும் விரித்து அதில் நடக்கச் செய்தனர். சகோதரிக்காக சகோதரர்கள் மேற்கொண்ட இந்த உணர்ச்சி மிகு வீடியோ இணையதளங்களில் அதிகம் பேரால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments