நாளை முதல் மெரீனா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி
நாளை முதல் மெரீனா உள்ளிட்ட சென்னையின் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை நீக்கப்படுகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக கடற்கரைகளுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை நாளை முதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது.
கடற்கரையில் கூட்டமாகக் கூடக் கூடாது, முகக் கவசம் அணிந்து வர வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் படி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
Comments