2023ஆம் ஆண்டு ஹெச்.1பி விசாவிற்கான பதிவு மார்ச் 1ல் தொடங்கும் - அமெரிக்கா குடியேற்றத்துறை
2023ஆம் ஆண்டுக்கான ஹெச்.1பி விசாவிற்கான பதிவு மார்ச் 1ஆம் தேதி தொடங்கும் என அமெரிக்காவின் குடியேற்றத்துறை அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து பணிபுரியும் வெளிநாட்டவருக்காக அந்நாடு ஹெச்.1 பி விசா வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ஹெச்.1பி விசாக்களில் சுமார் 70 சதவீதத்தை இந்தியர்களே பெறுகின்றனர்.
இந்நிலையில் ஹெச்.1 பி விசாவுக்கு மார்ச் 1-ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த விசாவுக்கு தேர்வு செய்யப்பட்டது தொடர்பான விவரங்கள் மார்ச் 31-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டிலும் 65,000 ஹெச்1 பி விசாக்கள் வழங்க உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், கூடுதலாக அமெரிக்காவில் உயர்கல்வி பயின்ற 20,000 பேருக்கு இந்த விசா வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Comments