ஜெர்மனியில் கடலோரப்பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த அதிகனமழை.!

0 2959

வடக்கு ஜெர்மனியில் உள்ள கடலோரப்பகுதிகளில் நேற்று ஒரே இரவில் சூறாவளிக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித்தீர்த்தது.

இதன் எதிரொலியாக அங்குள்ள பல பகுதிகளில் ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதுடன் துறைமுக நகரமான ஹாம்பெர்க் உட்பட பல இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹாம்பெர்க் நகரில் பாயும் Elbe ஆற்றில் நீரின் அளவு, இயல்பை விட 17 அடி உயரம் அதிகரித்து, கரைபுரண்டு ஓடுவதால் அங்குள்ள புகழ்பெற்ற மீன் சந்தை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பல்வேறு இடங்களில் தண்டவாளங்கள் மற்றும் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்திருப்பதால் அவற்றை அகற்றும் பணிகளில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.  விஸ்மர் நகரில பல இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை தொடரும் எனவும், மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments