ஜம்மு காஷ்மீரில் 12 மணி நேரத்தில் 5 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினர்

0 2555

ஜம்மு காஷ்மீரில் இரு வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ் - இ - முகம்மது இயக்க தளபதி உள்ளிட்ட பயங்கரவாதிகள் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

புல்வாமா மற்றும் பட்கம் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கங்களான லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் இ முகமம்து ஆகியவற்றை சேர்ந்தவர்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அப்பகுதியில் நேற்று மாலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளை சுற்று வளைத்து என்கவுன்டரில் ஈடுபட்டனர்.

சுமார் 12 மணி நேரம் இருவேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ் - இ - முகம்மது முக்கிய தளபதியான ஜாகித் வானி உள்ளிட்ட 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments