விருதுநகரில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருதுநகர் அருகே நாட்டார்மங்களம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், வெடிவிபத்தில் படுகாயமடைந்தோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தெய்வேந்திரன் என்பருக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments