அமெரிக்க ஓட்டலில் கார்பன் மோனாக்சைடு நச்சுவாயுவால் பாதிப்பு... 7 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை
அமெரிக்க நட்சத்திர ஓட்டல் ஒன்றில், கார்பன் மோனாக்சைடு நச்சுவாயுவால் பாதிக்கப்பட்ட 7 பேர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓஹியோ மாகாணத்தில் மேரிஸ்வில்லே பகுதியில் உள்ள Hampton Inn என்னும் ஓட்டலில், நீச்சல்குளம் பகுதியில் இருந்தவர்களுக்கு திடீரென மயக்கம், தொண்டை எரிச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. முதலில் 2 வயது சிறுமி ஒருவர் நினைவற்ற நிலையில், நீச்சல் குளத்தில் இருந்து மீட்கப்பட்டார்.
இதையடுத்து 9 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஓட்டலில் இருந்தவர்கள் கார்பன் மோனாக்சைடால் எப்படி பாதிக்கப்பட்டனர் என்பது குறித்த முழு விவரம் தெரியவில்லை என, மேரிஸ்வில்லே பகுதியின் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி ஜே ரிலே தெரிவித்தார்.
Comments