மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு நாள்: காந்தி சிலைக்கு ஆளுநர், முதலமைச்சர் மரியாதை

0 2088

மகாத்மா காந்தியின் 75-வது நினைவுநாளை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு, ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், சென்னை சர்வோதய சங்கத்தினர் பள்ளி மாணவியர்களுடன் இணைந்து, "வாழ்க, வாழ்க திராவிட நாடு வாழ்க" உள்ளிட்ட தேச பக்தி பாடல்களை பாடினர்.

இதையடுத்து, ஆளுநர் ஆர்.என். ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தேசபக்தி பாடல்களை ரசித்து கேட்டனர். பின்னர், சர்வோதய சங்கம் சார்பில், ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு கதர் நூல் மாலை பரிசளிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments