விருதுநகர் அருகே பட்டாசு ஆலைக் கழிவுகளை எரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் பலி

0 2335

விருதுநகர் மாவட்டம் அம்மன் கோவில்பட்டியில் பட்டாசு ஆலைக் கழிவுகளை தீவைத்து எரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான ஆலையில், நேற்று வெடி மருந்து கழிவுகளை ஆலை வளாகத்தை ஒட்டியுள்ள பகுதியில், தொழிலாளர்கள் தீவைத்து எரித்த போது பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆறுமுகம் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலும், குபேந்திரன் என்பவர் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர்.

மற்றொரு தொழிலாளி தெய்வேந்திரன், பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக, தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் கைது செய்த நிலையில், ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments