மதுபோதையில் அதிவேகமாக இளைஞர் ஓட்டி வந்த கார் செல்போன் கடை மீது மோதி தீப்பற்றி எரிந்து நாசம்
மதுரை சிம்மக்கல் அருகே மதுபோதையில் அதிவேகமாக இளைஞர் ஓட்டி வந்த கார் செல்போன் கடை மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
மதுரை பார்க்டவுன் பகுதியை சேர்ந்த சிவன் என்பவர் நண்பர்கள் 4 பேருடன் ரயில்நிலையம் நோக்கி காரில் சென்றுள்ளார். சேதுபதி மேல்நிலைபள்ளி அருகே உள்ள சிக்னல் கம்பத்தில் மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த, செல்போன் கடை மீதும் மோதி நின்றது. இந்த சம்பவத்தில் கார் தீப்பற்றி கொளுந்து விட்டு எரிந்ததுடன், கடையின் முகப்பு பகுதியும் மளமளவென எரிந்தது.
காரில் இருந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
Comments