தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.31.82 லட்சம் பணமோசடி செய்த நபர் கைது

0 3241

கோயம்புத்தூர் அருகே தனியார் வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து 31 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் பணமோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் காந்திபுரம் பகுதியில் உள்ள  தனியார் வங்கியில் நகைமதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார். வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களிடம், போலி நகைகளை கொடுத்து அடமானம் வைத்து தருமாறு கூறியுள்ளார்.

வங்கி அதிகாரிகளின் ஆய்வில் வாடிக்கையாளர்களிடம் போலி நகை வழங்கி பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வங்கி அதிகாரி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜெய்சங்கரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments