ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது இந்தியா

0 5534

19வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டின் காலிறுதியில் வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.

முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம், இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 37 புள்ளி 1 ஓவர்களில் 111 ரன்களுக்கு வங்காளதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய வீரர்கள் ரவிக் குமார் 3 விக்கெட்டும், விக்கி ஆஸ்ட்வால் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 30 புள்ளி ஓவர்களில் 5 விக்கெட்டு இழப்புக்கு 117 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் Angkrish Raghuvanshi 44 ரன்கள் சேர்த்தார். வரும் 2ஆம் தேதி நடக்கும் அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவை, இந்திய அணி எதிர்கொள்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments