பட்ஜெட்டில் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளுக்கு கூடுதல் கூடுதல் நிதி ஒதுக்கக் கோரிக்கை
பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள மத்திய அரசின் பட்ஜெட்டில் சுகாதார கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நாட்டில் கொரோனா அலை உருவாகியதால் இந்தியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நாட்டின் சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயமும் எழுந்தது.இனி எதிர்காலத்தில் எந்த ஒரு நோய்த் தொற்றும் பேரிடர் காலமும் வர நேர்ந்தால் அதனை எதிர்கொள்வதற்கு அடிமட்டத்தில் இருந்து உள்கட்டமைப்பு சுகாதார வசதிகளை மேம்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த மருத்துவ வல்லுனர் டாக்டர் நரேஷ் டிரெஹான் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாவட்ட மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்
Comments