அரசுப் பள்ளியில் பயின்ற 541 மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். சீட்
தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 541 மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் மட்டும் 54 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
ஜலகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த சந்தியா என்ற மாணவி, நீட் தேர்வில் 398 மதிப்பெண்கள் எடுத்து, ஏழரை சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் சேருகிறார்.
மதுரையில் ஒரே பள்ளியில் பயின்ற 5 மாணவிகள் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் சேருகின்றனர். அவ்வை மாநகராட்சி பள்ளியில் பயின்ற 5 மாணவிகளுக்கு சீட் கிடைத்துள்ளது.
அதேபோன்று மற்றொரு மாநகராட்சி பள்ளியில் பயின்ற மூன்று மாணவிகளும் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பை பெற்றிருக்கின்றனர். இதேபோன்று, தென்காசி மாவட்டத்திலும் அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 16 மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.
Comments