பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் இரு நாட்களில் ஜீரோ ஹவர் இடம்பெறாது என அறிவிப்பு
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் திங்களன்று தொடங்கும் நிலையில், கூட்டத் தொடரின் முதல் இரு நாட்களில் ஜீரோ ஹவர் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார்.
பிப்ரவரி முதல்நாளில் 2022 - 2023 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
முதல் நாளில் குடியரசுத் தலைவர் உரையாற்ற உள்ளதாலும், இரண்டாம் நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாலும் அந்த இரு நாட்களிலும் ஜீரோ ஹவர் இடம்பெறாது என்றும், பிப்ரவரி இரண்டாம் நாள் முதல் ஜீரோ ஹவர் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments