கிரிமினல்களுக்கு சீட் வழங்குவதில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இடையே போட்டி - யோகி குற்றச்சாட்டு
உத்தரப்பிரதேசத்தில் கிரிமினல்களுக்குத் தேர்தலில் சீட் வழங்குவதற்கு சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே போட்டி நிலவுவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதிக் ஆட்சிக்காலத்தில் முசாபர்நகர் வன்முறையில் அறுபதுக்கு மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரத்து ஐந்நூற்றுக்கு மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். கிரிமினல்கள் எம்எல்ஏ ஆனால் துப்பாக்கியுடன் சுற்றுவார்கள் என்றும் கூறினார்.
மொரதாபாத்தில் சமாஜ்வாதி வேட்பாளராகப் போட்டியிடுபவர் தாலிபான் ஆதரவாளர் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
Comments