ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஆஷ்லி பார்ட்டி..

0 5082

44 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற சாதனையை ஆஷ்லே பார்டி படைத்துள்ளார்.

மெல்போர்னில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி, அமெரிக்காவின் டேனியல் காலின்ஸுக்கு எதிரான முதல் சுற்றை 6 க்கு 3 என்ற செட் கணக்கில் எளிதாக கைப்பற்றினார்.

இரண்டாம் சுற்றில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய டேனியல் காலின்ஸ், ஒரு கட்டத்தில் 5 க்கு ஒன்று என முன்னிலை வகித்தார். சுதாரித்து கொண்ட ஆஷ்லே பார்டி கடுமையாக போராடி சரிவில் இருந்து மீண்டார்.

இறுதியில் 7 க்கு 6 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றிய ஆஷ்லே பார்டி உள்ளூர் ரசிகர்களின் பலத்த கரகோஷத்துடன் வெற்றி வாகை சூடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments