சென்னையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ளத் தடை - ககன் தீப் சிங் பேடி
சென்னையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வீடு, வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதியில்லை என்றும் 100 நபர்களுக்கு மேல் உள் அரங்க கூட்டத்தில் திரண்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகாரட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கு பிறகு பேட்டியளித்த அவர், முகக் கவசம் அணியாமல் வேட்பாளர்கள் மற்றும் கட்சி சார்ந்த நபர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் வேட்பாளர்கள் குழுவாக பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதாக குறிப்பிட்ட ககன் தீப் சிங் பேடி, 45 பறக்கும் படைகள் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
Comments