எஸ்.பி.ஐ. வங்கியின் புதிய வழிகாட்டுதலுக்கு மகளிர் ஆணையம் கண்டனம்
3 மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்களை புதிதாக பணிக்கு சேர்க்க வேண்டாம் என்ற எஸ்.பி.ஐ. வங்கி வழிகாட்டுதலுக்கு எதிப்பு தெரிவித்துள்ள மகளிர் ஆணையம், அந்த உத்தரவை திரும்பப் பெறுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி, 3 மாதத்திற்கு மேல் கர்ப்பிணியாக இருக்கும் பெண்களை புதிதாக வேலைக்கு சேர்க்க வேண்டாம் என கூறியதோடு, அவர்கள் தற்காலிகமாக தகுதியற்றவர்களாக கருதப்படுவார்கள் எனவும், வேலையில் சேருவதற்கான அனைத்து தகுதிகளையும் அவர்கள் பெற்றிருந்தாலும், குழந்தை பிறந்து 4 மாதத்திற்கு பிறகே வேலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், எஸ்.பி.ஐ. வங்கியின் இந்த முடிவு பாரபட்சமானது, சட்டத்திற்கு புறம்பானது என டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் கூறியுள்ளார். பணியிடங்களில் சட்டப்படி பெண்களுக்கு கிடைக்கும் பேறு கால சலுகைகளை இது நீர்த்துப் போகச் செய்துவிடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Comments