வெனிசூலாவில் ஒரு ரூபாய் 64 பைசாவிற்கு விற்கப்படும் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு.. கள்ளச்சந்தையில் வாங்கி செல்லும் வாகன ஓட்டிகள்..
ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய் 64 பைசாவிற்கு விற்கப்படும் வெனிசூலாவில், பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அண்டை நாடான கொலம்பியாவில் இருந்து கடத்திவரப்படும் பெட்ரோலை வாகன ஓட்டிகள் வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் வளம் மிக்க வெனிசூலா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அங்கு நிலவும் நிர்வாகக் குளறுபடிகளால், பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
நாட்கணக்கில் மக்கள் பெட்ரோல் பங்குகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால், ஒவ்வொரு நபருக்கும் குறிப்பிட அளவிற்கு தான் பெட்ரோல் விற்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதனால் கொலம்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்டு கள்ளச்சந்தையில் விற்கப்படும் பெட்ரோலை லாரி மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் வாங்கி செல்கின்றனர்.
உலகிலேயே குறைந்த விலைக்கு பெட்ரோல் விற்கப்படும் வெனிசூலாவில் இருந்து கடந்த காலங்களில் கொலம்பியாவிற்கு பெட்ரோல் கடத்தப்பட்டு வந்தது. தற்போது நிலமை தலைகீழாக மாறியுள்ளது.
Comments