உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள் உள்ளிட்ட போர் தளவாடங்களை அனுப்பத் தொடங்கிய அமெரிக்க விமானப்படை
உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள் உள்ளிட்ட போர் தளவாடங்களை, அமெரிக்க விமானப்படை அனுப்பத் தொடங்கியுள்ளது.
டோவர் விமானப்படை தளத்தில் இருந்து, இவை உக்ரைனுக்கு அனுப்பப்படுகிறது. ரஷ்யா ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளதாக உக்ரைனில் போர் பதற்றம் நிலவும் சூழலில், உக்ரைன் அருகேயுள்ள கிழக்கு ஐரோப்பிய மற்றும் நேட்டோ நாடுகளுக்கு, கூடுதல் படைகளை அனுப்பி வைக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே அப்பகுதிகளில் 8,500 அமெரிக்கப் படையினர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைனுக்கு போர் தளவாடங்களும் அனுப்பி வைக்கப்படுகிறது.
Comments