ஆட்டோ சின்னம் கேட்கும் விஜய் மக்கள் இயக்கம்... மறுக்கும் தேர்தல் ஆணையம்..?

0 3710

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்யாததால், நிர்வாகிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக ஆட்டோ சின்னத்தை ஒதுக்க முடியாது எனவும், இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே சின்னம் ஒதுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் அனைத்து மாவட்ட தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் பனையூரில் நடைபெற்றது.

விஜய்யின் புகைப்படம், மக்கள் இயக்க கொடியை தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 300 பேர் வரை வேட்பு மனு தாக்கல் செய்யவும், ஒரு நபர் 4 வேட்பு மனுதாக்கல் செய்யவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments