அடுக்குமாடி குடியிருப்பு லிஃப்டில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த இளைஞர் கைது..!
சென்னை புரசைவாக்கம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் மின் தூக்கியில் பணிப் பெண்ணை ஆபாசமான முறையில் அணுகியதாக காய்கறி விற்கும் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பின் மின் தூக்கியில் வந்த இளைஞன் விக்னேஷ், அதே லிப்டில் வந்த பணிப் பெண் முன் ஆபாச செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் அளித்த புகாரில் விக்னேஷை கைது செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments