மாணவி வீட்டில் வம்பு.. வாசிங்மெஷின் மேனுக்கு மாஸாக மாவுக்கட்டு.. எக்ஸ்ட்ரா சர்வீஸால் விபரீதம்.!

0 6965

சென்னை புழலில் வாசிங் மெஷின் சர்வீசுக்காக வீட்டிற்கு வந்த ஆசாமி, ஆன் லைன்  வகுப்பின் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக 10 ஆம் வகுப்பு மாணவி புகாரளித்த நிலையில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் ஓட்டம் காட்டியவர் ஏரிக்கரையில் வழுக்கி விழுந்ததாக கூறி போலீசார் மாவுக்கட்டு போட்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சென்னை புழலில் வாசிங்மெசினை பழுது நீக்குவதற்காக சுபான்ஷா என்பவர் அங்குள்ள ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம், செல்போன் மூலம் பேசி மயக்கி காதல் வலையில் வீழ்த்திய சுபான்ஷா அடிக்கடி வீட்டிற்கு போக்குவரத்துமாக இருந்துள்ளார்.

இது அந்த பெண்ணின் மகளுக்கு பிடிக்கவில்லை, கணவர் குடிக்கு அடிமையாகி படுத்த படுக்கையாகி விட்ட நிலையில் அந்த பெண்ணை முழுவதுமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த சுபான்ஷா, அவரது 10 ஆம் வகுப்பு படிக்கும் மகளுக்கும் வலை விரித்துள்ளார்.

அந்த மாணவியோ பலமுறை எச்சரித்தும் அடங்காத சுபான்ஷா மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தாய் சொன்னாலும் சுபான்ஷா கட்டுப்படாமல் இருந்துள்ளான். இதனால் பொது தேர்வுக்கு தயாராக இயலாமல் கடும் மன உளைச்சலில் தவித்துள்ளார். இந்த நிலையில் மாணவியின் ஆன் லைன் வகுப்பின் போது ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி மேலும் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகின்றது.

இதையடுத்து சக மாணவிகள் கூறிய யோசனைபடி சைல்டு ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு சுபான் ஷாவால் ஏற்பட்ட தொல்லை குறித்தும், மன உளைச்சல் குறித்தும் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மாணவியின் புகார் தொடர்பாக புழல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணகி, சுபான்ஷாவை விசாரணைக்கு அழைத்துள்ளார். என்னிடம் விசாரிப்பதற்கு முன்பாக முதலில் அந்த மாணவியின் தாயிடம் தன்னை பற்றி கேட்டு தெரிந்து கொள்ளும்படி அசால்டாக பதில் கூறியவன் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

மகளிர் காவல் ஆய்வாளரும் பலமுறை , இது மாணவி தொடர்பான புகார் என்பதால் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியும் போலீசாருக்கு தண்ணி காட்டிவந்துள்ளார் சுபான்ஷா. இந்த நிலையில் புழல் ஏரிக்கரையில் சுபான்ஷா பதுங்கி இருக்கும் தகவல் அறிந்து போலீசார் அவரை சுற்றி வளைத்து துரத்தி உள்ளனர்.

அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்வதற்காக எகிறி குதித்தபோது தவறி கீழே விழுந்த சுபான்பாஷாவிற்கு வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை மீட்ட போலீசார் மனிதாபிமானத்தோடு அழைத்துச்சென்று மாவுக்கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர். சர்வீசுக்கு சென்ற இடத்தில் எக்ஸ்ட்ரா சர்வீசாக மாணவிக்கு தொல்லை கொடுத்த சுபான்ஷா மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments