அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5சதவீத உள் ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வில் 541 இடங்கள் நிரம்பின

0 6055

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வில் மொத்தம் 541 மருத்துவ இடங்கள் நிரம்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஒமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் நடந்த இரண்டாவது நாள் கலந்தாய்வில் 7 புள்ளி 5 % இடஒதுக்கீட்டின்கீழ் மொத்தம் 544 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. கலந்தாய்வில் பங்கேற்க 762 மாணவர்களுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில்,437 எம்பிபிஎஸ் இடங்களும் 104 பல் மருத்துவ இடங்களும் நிரம்பியதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 324 எம்பிபிஎஸ் இடங்களும், 13 பல் மருத்துவ இடங்களும் நிரம்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments