உறைய வைக்கும் பனியில் வெளியே பரிதவித்த 63 நாய் குட்டிகள் மீட்பு
கிழக்கு துருக்கியில் பூஜ்ஜியத்துக்கும் குறைவான தட்பவெட்பம் பதிவாகி வரும் நிலையில், உறைய வைக்கும் பனியில் வெளியே பரிதவித்த 63 நாய் குட்டிகள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன.
Erzurum மாகாணத்தில் பகல் நேர வெப்பநிலை மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் ஆகவும் இரவு நேர வெப்பநிலை மைனஸ் 16 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகி வருகிறது. இந்நிலையில் மீட்கப்பட்ட நாய்க்குட்டிகள் அனைத்தும் அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபின் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Comments