சிவகங்கையில் பறக்கும் படையினர் தீவிர சோதனை-உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4.40 லட்சம் பறிமுதல்

0 2576

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சிவகங்கையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

அம்மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், கோட்டை வாசல் அருகே சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை சிவகங்கை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அந்த நபர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் காமராஜ் என்பதும் அவர் புகையிலை வியாபாரி என்பதும் தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments