தற்காலிகப் பாலத்தில் ஆபத்தான முறையில் நடந்து சென்று பெண்கள் ; உடனடியாக இரும்புப் பாலம் கட்டிக் கொடுத்த அமைச்சர்

0 2842
தற்காலிகப் பாலத்தில் ஆபத்தான முறையில் நடந்து சென்று பெண்கள்

மகாராஷ்டிரத்தில் தற்காலிகப் பாலத்தில் ஆபத்தான முறையில் நடந்து சென்று பெண்கள் தண்ணீர் எடுத்துவந்ததைச் சமூக வலைத்தளத்தின் வாயிலாக அறிந்த மாநில அமைச்சர் ஆதித்ய தாக்கரே இரும்புப்பாலத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.

நாசிக் மாவட்டத்தில் செண்ட்ரிபாடா என்னும் ஊரில் நீரோடைக்கு மேல் கரடுமுரடான பாறைகளுக்கிடையே மரத்தண்டுகளால் அமைத்த தற்காலிகப் பாலத்தில் பெண்கள் தண்ணீர்க்குடம் சுமந்து செல்லும் காட்சி சமூக வலைத்தளத்தில் பரவியது.

இதையறிந்த அமைச்சர் ஆதித்ய தாக்கரே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதையடுத்து அங்கு உடனடியாக இரும்புப் பாலம் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments