கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டுத் தற்கொலை

0 5292
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி தூக்கிட்டுத் தற்கொலை

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகள்வழிப் பேத்தி சவுந்தர்யா, பெங்களூர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது அவரது குடும்பத்திலும் பாஜக வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவின் மகளான சவுந்தர்யா பெங்களூர் ராமையா மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார். உடன்பணியாற்றிய மருத்துவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டு அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழ்ந்துவந்தார்.

இருவருக்கும் 6 மாதக் குழந்தையுள்ளது. இந்நிலையில் இன்று வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு, போரிங் அரசு மருத்துவமனைக்குக் கூறாய்வுக்காகக் கொண்டு செல்லப்பட்டது.

தகவல் அறிந்ததும் எடியூரப்பா, கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். சவுந்தர்யா தற்கொலை தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments