புதுக்கோட்டை ஜல்லிக்கட்டுப் போட்டி:மாடுகள் முட்டி 20க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம்

0 2212

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில், மாடுகள் முட்டி 20க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

ரெகுநாதபுரம் பகுதியில் காலை 8 மணியளவில் அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி ஆகியோர் தொடங்கிவைத்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் கலந்துகொண்டார். 300 மாடுபிடி வீரர்கள், 750 காளைகள் பங்கேற்ற போட்டியில், அதிகளவில் காளைகளை அடக்கிய வீரர்கள் கட்டில், மிக்ஸி, சைக்கிள், தங்க நாணயம் என பரிசுகளைத் தட்டிச் சென்றனர்.

போட்டியில் காயமடைந்த வீரர்கள், அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்கள் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments