நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- புகார்கள் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்

0 1689

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை, ரிப்பன் மாளிகையில் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் தேர்தலுக்கான நடவடிக்கைகளை, மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி துரிதப்படுத்தி உள்ளார். அந்த வகையில் இந்தக் கட்டுப்பாட்டு அறையில், சுழற்சி முறையில் பணிபுரிய 20 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் தொடர்பான புகார்களை 1800 425 7012 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், மாநகராட்சியின் இணையதள இணைப்பிலும் தெரிவிக்கலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments