பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி பூஸ்டர் தடுப்பு மருந்து.. இந்தியாவில் பரிசோதிக்க மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி..!
பாரத் பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி பூஸ்டர் தடுப்பு மருந்தின் சோதனையை இந்தியாவில் மேற்கொள்ள இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
ஏற்கனவே கோவேக்சின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோசாக நாசி வழியாக செலுத்தும் மருந்தினை அளித்து சோதனையிட திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 5 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட உள்ள இந்த சோதனை, நாட்டின் 9 இடங்களில் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
2ஆவது டோஸ் தடுப்பூசிக்கும் நாசி வழியாக செலுத்தும் பூஸ்டர் டோஸிற்கு இடையிலான இடைவெளி 6 மாதமாக நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளதாகவும், பரிசோதனைகளுக்கு பிறகு மார்ச் மாதத்தில் இதனை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Comments