திருவொற்றியூர் எம்எல்ஏ .கே.பி.சங்கர் மேற்கு பகுதி திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கம்

0 5092

சென்னை திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ. கே.பி.சங்கர் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு திருவொற்றியூர் தொகுதியில் வெற்றிபெற்ற கே.பி.சங்கர், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி வருவதால், அவர் வகித்து வந்த திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

திருவொற்றியூர் நடராஜன் தெருவில் மாநகராட்சி சார்பில் புதிதாக சாலை போடும் பணிகள் 30 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் அங்கு உதவியாளர்களுடன் சென்ற எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், மாநகராட்சியின் உதவி பொறியாளரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கே.பி.சங்கரை கட்சி பொறுப்பில் இருந்து நிக்கி திமுக உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments