மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏக்கள் 12 பேரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
மகாராஷ்டிராவில் பாஜக எம்எல்ஏக்கள் 12 பேர், ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அநாகரீகமாக நடந்து கொண்ட புகாரில், கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து, சஞ்சய் கூட், கிரிஸ் மகாஜன் உள்ளிட்ட 12 பேரும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஒரு கூட்டத்தொடரை தாண்டி எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்தது, சட்டவிரோதமானது என்றும், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும், உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனிடையே வரலாற்று சிறப்புமிக்க இந்த உத்தரவை வரவேற்பதாக, மகாராஷ்டிரா பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
Comments