ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர்... இறுதிப்போட்டியில் ரஃபேல் நடால்!

0 3796

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முன்னணி வீரர் ரஃபேல் நடால், இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

மெல்போர்னில் இன்று நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் மேத்தியோ பெரெட்டினி-யை எதிர்கொண்ட நடால், முதல் 2 செட்களில் ஆதிக்கம் செலுத்தி 6-3, 6-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார்.

எனினும் 3வது செட்டில் மேத்தியோ பெரெட்டினி 6-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்று நடாலுக்கு நெருக்கடி கொடுத்தார். பின்னர் சுதாரித்துக்கொண்டு 4-வது செட்டில் அதிரடியாக விளையாடிய நடால் 6-3 என்ற செட் கணக்கில் முன்னிலையடைந்து வெற்றி பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments